Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழ்நாடு கொடி ஏற்ற முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது

நவம்பர் 02, 2023 11:44

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் புதிய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே 1956 நவம்பர் 1ம் தேதி மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட போது தமிழ்நாடு என பிரிக்கப் பட்டதைக் கொண்டாடும் வகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் புலி,வில், கயல், பொறித்த கொடியை தமிழ்நாடு கொடி என ஏற்ற நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் நடராஜ் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் 20 பேர் முயற்சித்தனர்.

காவல்துறை அனுமதி இல்லாததால் கொடியேற்ற விடாமல் தடுத்து 20 பேரையும் காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி நாமக்கல் மாவட்ட செயலாளர் நடராஜன் கூறியதாவது. தமிழ்நாடு கொடி என தமிழ்நாடு மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட தினத்தை தமிழ்நாடு தினம் எனக் கொண்டாட தடை விதித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதயடுத்து கொடியேற்ற காவல்துறை அனுமதி மறுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இந்த கொடியில் இறையாண்மைக்கு எதிராக தேசவிரோத செயலைக் குறிக்கும் விதமாக ஏதாவது உள்ளதா? மூவேந்தர் கொடியை இணைத்து ஒரே கொடியாக ஏற்றுவதைத் தடுப்பது வன்மையாக கண்டிக்கதக்கது. சீமான் எதைச் செய்தாலும் அதற்கு தமிழக அரசு தடை விதித்து வருகிறது எனக் கூறினார்.

தலைப்புச்செய்திகள்