Wednesday, 5th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இனி அளவில்லா மெமரி டேட்டா: ஒன் டி.பி. அறிமுகம்

மே 17, 2019 12:24

புதுடில்லி : கே.பி., எம்.பி., யில் தொடங்கி, ஜி.பி.,யில் பயணிக்கும் மெமரி டேட்டாவின் அளவு இனிமேல் அளவில்லாத அளவிற்கு டி.பி., (டெர்ரா பைட்)யாக மாறியுள்ளது. உலகின் முதல் டி.பி., எஸ்.டி., கார்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சான்டிஸ்க் நிறுவனம் உலகின் முதல் 1 டி.பி. மைக்ரோ எஸ்.டி. கார்டினை விற்பனைக்கு விடுத்துள்ளது.ஸ்மார்ட்போனின் மெமரி பிரச்சனைக்கு இதன் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. சான்டிஸ்க் நிறுவனம் 1 டி.பி. எக்ஸ்ட்ரீம் மைக்ரோ எஸ்.டி. கார்டை உருவாக்கி உள்ளது.

புதிய மைக்ரோ எஸ்.டி. கார்டில் அதிக மெமரி கொண்ட தரவுகளை சேமிக்க முடியும். முன்னதாக இந்த மைக்ரோ எஸ்.டி. கார்டு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இது அமேசான் தளத்தில் 31,540 ரூபாய்க்கு இந்த கார்டு விற்பனை செய்யப்படுகிறது.
இது உலகின் முதல் 1 டி.பி. எஸ்.டி. கார்டு ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. 

தலைப்புச்செய்திகள்