Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

லாரி வேலை நிறுத்த போராட்டத்திற்கு கேஸ் டேங்கர் சங்கம் ஆதரவு

நவம்பர் 01, 2023 08:44

நாமக்கல்: வரும் நவம்பர் 9 ந் தேதி லாரி வேலைநிறுத்த போராட்டத்திற்கு கேஸ் டேங்கர் சங்கம் ஆதரவு தெரிவித்து உள்ளது.

மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி உயர்வை கண்டித்தும், திரும்பப்பெற வலியுறுத்தியும் நவ. 9 ந் தேதி நடைபெறும் மாநில அளவிலான லாரி நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அன்றைய தினம் 2,000 கேஸ் டேங்கர் லாரிகள் ஓடாது என் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி உள்ளடக்கிய, தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 34 வது மகா சபை கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. சங்க தலைவர் சுந்தர்ராஜன் தலைமை வகித்தார்.

கூட்ட முடிவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது நெடுஞ்சாலைகளில்  சுங்க கட்டணம், டயர் உள்ளிட்ட உதிரி பாகங்கள் விலை உயர்வு, மூன்றாம் நபர் விபத்து இன்சூரன்ஸ் பிரிமியம் உயர்வு போன்றவற்றால் நாளுக்கு நாள் லாரி தொழில் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் லாரிகளுக்கு பசுமை வரி ரூ.500 ல் இருந்து ரூ.750 ஆகவும், காலாண்டு வரி 6 சக்கர லாரிகளுக்கு ரூ.3,596 ல் இருந்து ரூ.904 உயர்த்தி ரூ.4,550 ஆகவும், 10 சக்கர லாரிகளுக்கு ரூ.4,959 ல் இருந்து ரூ.2,041 உயர்த்தி ரூ.7,059 ஆகவும், 12 சக்கர லாரிகளுக்கு ரூ.6,373 ல் இருந்து ரூ.3,327 உயர்த்தி ரூ‌9,170 ஆகவும், 14 சக்கர லாரிகளுக்கு ரூ.7,787 ல் இருந்து ரூ.3,413 உயர்த்தி ரூ.11,290 ஆகவும், 16 சக்கர லாரிகளுக்கு ரூ.4,200ம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு, இந்த வரி உயர்வை மறு பரிசீலனை செய்து, திரும்ப பெற வேண்டும். இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் நவம்பர் 9 ந் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது. 

இந்தப் போராட்டத்திற்கு கேஸ் டேங்கர் சங்கமும் ஆதரவு தெரிவித்து, அன்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, தமிழ்நாடு முழுவதும், 2 ஆயிரம் கேஸ் டேங்கர் லாரிகள் இயங்காது, வேலை நிறுத்த போராட்டத்தால் அன்றைய தினம் மட்டும் ரூ. 3 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்