Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரி மாணவியரின் தனித்திறன் மேம்பாட்டு நிகழ்வு

நவம்பர் 01, 2023 11:14

நாமக்கல்: நாமக்கல், டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர்கல்வி பயிலும் மாணவியர்க்கு, பெரியார் பல்கலைக் கழகப் பாடத் திட்டத்தோடு மதிப்பு கூட்டப்பட்ட பாடப்பிரிவுகள் கற்றுத்தரப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, ஆபரண உருவாக்கம், சணல் பைகள் தயாரிப்பு, தையல் வேலைப்பாடுகள், ரங்கோலி எனப்படும் கோலங்கள், இயற்கைப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட முகப்பொலிவு வண்ணச்சாயம் உருவாக்கம், வீட்டில் சமையல் அறையில் இருந்து வெளியாகும் கழிவுநீர் கொண்டு காய்கறிகள் மற்றும் கீரைகள் உற்பத்தி செய்யும் நுணுக்கம், இதய சுவாசத்தினை சீர்படுத்தும் ஏரோபிக்ஸ் பயிற்சிகள், யோகா மற்றும் மனத்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் போன்றவை அவர்களுக்கு கற்றுத் தரப்படுகின்றன.

இதன் தொடர்ச்சியாக இந்நிகழ்ச்சியின் மூலம் பலனடைந்த மாணவியர் உருவாக்கியப் பொருட்களின் செயல் விளக்கம் மற்றும் விற்பனை நிகழ்வு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் கல்லூரியின் செயல் இயக்குநர் அருணா செல்வராஜ் கலந்து கொண்டு மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

இந்நிகழ்வில் இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.புவனேஸ்வரி, துறைப் பொறுப்பாளர்கள் ஏ.லதா, வீ.இந்திரகுமாரி, ஏ.கவிதா, வீ.அர்ச்சனா, எஸ்.மோகனப்பிரியா, பி.கார்த்திகேயனி, ஜே.இவாஞ்சலின், ஜி.கோகிலா, ஏ.பி.பவித்ரா, பி.ஸ்ரீரேணுகாதேவி ஆகியோhர் கலந்து கொண்டனர்.

ஏறத்தாழ 100 மாணவியர் தாங்கள் உருவாக்கிய படைப்புகளை கண்காட்சியில் வெளிப்படுத்தியிருந்தனர்.

தலைப்புச்செய்திகள்