Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் கோட் சூட் அணிந்து மாணவிகள் வீரநடை

நவம்பர் 01, 2023 11:11

நாமக்கல்: சேலம் மாவட்டம், சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் அங்ஙமான விவேகானந்தா கலை அறிவியல் மகளிர்
கல்லூரி, சுவாமி விவேகானந்தா நேச்சரோபதி யோகா மருத்துவக் கல்லூரி, விவேகானந்தா பார்மஸி மகளிர் கல்லூரி ஒருமைப்பாட்டு தின விழா நடைபெற்றது.

மேலும் விவேகானந்தா நர்சிங் மகளிர் கல்லூரி, ரவீந்தரநாத் தாகூர் கல்வியியல் மகளிர் கல்லூரி மற்றும் விஸ்வபாரதி கல்வியியல் மகளிர் கல்லூரிகளில் பயிலும் 4,000 மாணவிகள் சார்பில் மத்திய அரசின் ‘மை யங் பாரத்’ தேசிய ஒருமைப்பாட்டு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய்படேலின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சிதறிக் கிடந்த பல்வேறு சமஸ்தானங்களை ஒன்றிணைத்து பாரத தேசத்தை உருவாக்கியதற்கு நன்றி கூறும் வகையில் அவரது பிறந்த தினத்தை தேசிய ஒருமைப்பாட்டு தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அந்த அடிப்படையில் ‘மை யங் பாரத்’ துவக்க விழா சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் மாணவிகள் சார்பில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றம் மருத்துவமனகைளின் தாளாளர் மற்றும் செயலர் பேராசிரியர் டாக்டர் மு.கருணாநிதி தலைமை தாங்கினார்.

நிர்வாக இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், வைஸ் சேர்மன் டாக்டர் கிருபாநிதி கருணாநிதி, இயக்குநர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி, செயல் இயக்குநர் டாக்டர் குப்புசாமி, தலைமை செயல் அதிகாரிகள் பேராசிரியர் சொக்கலிங்கம், பேராசிரியர் வரதராஜீ கலந்துக் கொண்டனர்.

திறன் மேம்பாட்டுத் துறை இயக்குநர் டாக்டர் குமரவேல், கல்லூரி முதல்வர்கள் டாக்டர் ஜோதிநாயர், டாக்டர் ஆனந்தகுமார், டாக்டர் ஆரோக்கியசாமி, டாக்டர் அழகுசுந்தரம், டாக்டர் மாலதி, டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே.இரவிசங்கர், ஐ.க்யூ.சி இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார், அட்மிஷன் அதிகாரி பேராசிரியர் தழிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பிரமாண்டமான கொடி கம்பத்தில் தேசியக் கொடி மாணவிகளால் ஏற்றப்பட்டது.

விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் 1,700 மாணவிகள் தேசிய கொடி ஏந்தி ‘மை யங் பாரத்’ தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழியினை ஏற்றனர். “பாரத தேசம் காப்போம் தேசிய ஒருமைப்பாட்டைக் காப்போம்.

சாதி மதம் இனம் மொழி ஆகிய பாகுபாடுகளைப் பார்க்க மாட்டோம் இளைய தலைமுறையினர் ஆகிய நாங்கள் பாரத தேசம் காப்போம்” என்று கோசமிட்டபடி தேசிய ஒருமைப்பாட்டு ஓட்டம் நடைபெற்றது. 

பயோகெமிஸ்ட்ரி,பயோடெக்னாலஜி, டெக்ஸ்டைல் ஃபேஷன் டிசைனிங், காஸ்டியும் டிசைன் ஃபேஷன், கணினி அறிவியல், வணிகவியல்,
மைக்ரோபயாலஜி, நியூட்டிரிஷன் டயடிக்ஸ், இயற்பியல், வேதியியல், கணிதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய துறைகளைச் சேர்ந்த 1,700 மாணவிகள் தேசிய ஒற்றுமை ஓட்டத்தில் பங்கேற்றனர்.

இவர்களில் பாரத தேசத்தைக் காக்கும் வீராங்கனைகளைப் போல் தேசிய கொடிகளை ஏந்தி சாம்பல் நிற கோட் சூட் அணிந்து ராணுவ மிடுக்குடன் தேசிய ஒருமைப்பாட்டு வீர நடை போற்ற டெக்ஸ்டைல் ஃபேஷன் டிசைனிங் காஸ்டியும் டிசைன் ஃபேஷன் மாணவிகளின்
அணிவகுப்பு அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

‘மை யங் பாரத்’ நிறைவு விழாவில் சிறப்பாக தேசிய ஒருமைப்பாடு அணிவகுப்பை நடத்திய டெக்ஸ்டைல் ஃபேஷன் டிசைனிங் காஸ்டியும் டிசைன் ஃபேஷன் மாணவிகளுக்கு பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் தலைமை செயல் அதிகாரி பேராசிரியர் வரதராஜீ, டெக்ஸ்டைல் ஃபேஷன் டிசைனிங் காஸ்டியும் டிசைன் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே.இரவிசங்கர், ஐ.க்யூ.சி இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார், அட்மிஷன் அதிகாரி பேராசிரியர்
தழிழ்ச்செல்வன் ஆகியோர் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ் களையும் வழங்கி பாராட்டினர். 

இந்த விழாவில் துறைத்தலைவர்கள் டாக்டர் கலைவாணி, பேராசிரியர் பிரபுகுமார், டாக்டர் பிரபாகரன், டாக்டர் மெய்வேல், பேராசிரியர்
தனலட்சுமி, டாக்டர் லோகநாயகி, டாக்டர் மைதிலி, டாக்டர் சுபராஜா, டாக்டர் அபிதா, பேராசிரியர் சண்முகபிரியா மற்றும் நாட்டுநலப்பணித் திட்ட அதிகாரி லோகநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

‘மை யங் பாரத்’ விழாவிற்கான ஏற்பாடுகளை ஃபேஷன் கிளப் மாணவிகள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்