Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சரக்கு போக்குவரத்து பாதிப்பால் திணறும் ஜவுளித் தொழில்

அக்டோபர் 31, 2023 06:37

பள்ளிபாளையம்: தீபாவளி பண்டிகை நெருங்குவதை ஒட்டி ,வணிக வர்த்தக நிறுவனங்கள் தங்கள் தீபாவளி பண்டிகை வியாபாரத்தை சுறுசுறுப்பாக துவக்கி உள்ளனர்.

பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான ஜவுளிக் கடைகள் இயங்கி வரும் நிலையில், தற்போது தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே முழுமையாக இருப்பதால், தீபாவளி ஜவுளி விற்பனை சூடு பிடித்துள்ளது.

அதே நேரத்தில் போதிய ஜவுளிகளை இருப்பு வைக்க முடியாமல் ஜவுளி கடை உரிமையாளர்கள் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து பள்ளிபாளையம் சேலம் சாலையில் உள்ள தனியார் ஜவுளிக்கடை உரிமையாளர் ஒருவர் கூறும் பொழுது ,தீபாவளி பண்டிகைகை ஒட்டி ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியோர், சிறுவர், சிறுமியர் என அனைத்து தரப்பினருக்கும் தேவையான வண்ண வண்ண உடைகளை நாங்கள் மும்பை, சூரத் , அகமதாபாத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தமாக ஆர்டர் கொடுத்து வரவழைத்து கடைகளில் இருப்பு வைத்து விடுவோம் .

சூரத் ,அகமதாபாத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சேலைகள் உள்ளிட்ட ஜவுளிகளை  ஜவுளிகளை ஏற்றி வரும் லாரிகள் கர்நாடகா மாநிலம் வழியாக தமிழ்நாட்டிற்குள் வந்து எங்களுக்கு வந்தடையும்.

ஆனால், தற்போது கர்நாடகா அணையிலிருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடுவது  தொடர்பான பிரச்சனைகள் எழுந்து வருவதால், தமிழகம் கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் ஒருவித பதற்றமான சூழல் உள்ளது.

கர்நாடக மாநிலத்திலும் அடிக்கடி காவிரி நீர் தொடர்பான போராட்டங் களும் நடைபெற்று வருகிறது.

மேலும் முன்பை போல தற்போது தமிழக வாகனங்கள் கர்நாடகாவிற்கு அதிகம் செல்ல முடியாத நிலை இருக்கும் காரணத்தினால், பல்வேறு மாநிலங்களை கடந்து கர்நாடகா வழியாக தமிழக வரவேண்டிய வாகனங்கள் கர்நாடகா மாநிலத்திற்கு முன்பாகவே எங்கள் ஜவுளிகளை ஏற்றிய லாரிகள் நின்று விடுகின்றன.

தற்போது நிலைமை மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு திரும்பியது  போல தோன்றினாலும், இன்னும் நாங்கள் ஆர்டர் செய்த ஜவுளி சரக்குகள் இன்னும் எங்கள் கைகளுக்கு முழுமையாக வந்த பாடு இல்லை. தீபாவளி நாட்கள் நெருங்க நெருங்க ஒருவித அச்சத்துடனே உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை அங்கே கொடுத்து வந்துள்ளோம். அந்த பொருள் உரிய நேரத்தில் கைகளுக்கு வரும் வரை நிம்மதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மத்திய ,மாநில அரசுகள் உடனடியாக காவிரி நீர் திறப்பு குறித்த விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்தகைய நடவடிக்கைகள் தொலைநோக்கு பார்வையுடன் இரண்டு மாநிலங்களிலும் பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையில்!! அதற்கான திட்டமிடுதலோடு செயல்பட வேண்டும்.

அப்போதுதான் இரு மாநில மக்களிடையே அமைதியும் இரு மாநில தொழில் சார்ந்த பிரச்சினைகளும் இல்லாத நிலை இருக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

தலைப்புச்செய்திகள்