Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்லூரியில், கல்லூரி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவியர் உறுதுணை

அக்டோபர் 31, 2023 06:32

நாமக்கல்: சேலம் மாவட்டம், சங்ககிரி விவேகானந்தா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 12 துறைகளைச் சார்ந்த முன்னாள் மாணவியர் அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் துறைவாரியாக நடைப்பெற்றது.

முன்னாள் மாணவியர் அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்திற்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ மனைகளின் தாளாளர் மற்றும் செயலர் பேரா. டாக்டர். மு.கருணாநிதி
தலைமை தாங்கினார். 

நிர்வாக இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், வைஸ் சேர்மன் டாக்டர் கிருபாநிதி கருணாநிதி,  இயக்குநர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

மேலும், செயல் இயக்குநர் டாக்டர் குப்புசாமி, தலைமை செயல் அதிகாரிகள் பேராசிரியர்கள் சொக்கலிங்கம், வரதராஜீ, திறன் மேம்பாட்டு இயக்குநர் டாக்டர் குமாரவேல், விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலசுப்பிரமணியன், டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே.இரவிசங்கர், ஐ.க்யூ.சி இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார், அட்மிஷன் அதிகாரி பேராசிரியர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன், கனிணி அறிவியல், மைக்ரோபயாலஜி, பயோகெமிஸ்டிரி,  பயோடெக்னாலஜி,
காமர்ஸ். இயற்பியல், வேதியியல், தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய 12 துறைகளைச் சார்ந்த 700 –க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவிகள் தத்தம் துறை வாரியாக ஆலோசனை நடத்தினர்.

விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் வளர்ச்சிக்கு முன்னாள் மாணவியர் அமைப்பு பல்வேறு வகைகளில் உறு துணையாகச் செயல்படும் என்று இந்த முன்னாள் மாணவியர் சந்திப்பில் ஜீனியர் மாணவிகளுடனான கலந்தாய்வில் உறுதி அளிக்கப்பட்டது. 

பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்களில்
உயர் பதவியில் இருக்கும் முன்னாள் மாணவிகள் எதிர்வரும் காலத்தில் ஜூனியர் மாணவிகளுக்கு
பன்னாட்டு வேலைவாய்ப்பு பற்றிய பயிற்சி முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். திறன் மேம்பாட்டுப்
பயிற்சி அளிக்கவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. தன்னம்பிக்கை ஊட்டும் பயிற்சிகளையும் முன்னாள் மாணவிகள் ஜீனியர் மாணவிகளுக்கு பயிற்சியளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் மாணவிகள் விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் புதிதாக கார்மெண்ட் ஏற்றுமதி ஆலை போல் உருவாக்கப்பட்டுள்ள ஹைடெக் ஃபேஷன் ஆய்வகத்தைப் பார்வையிட்டனர்.
காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் முன்னாள் மாணவிகள் அமைப்பின் தலைவராக சினேகல் மற்றும்
செயலாளராக ஷpல்பா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். டெக்ஸ்டைல் ஃபேஷன் டிசைனிங் முன்னாள் மாணவிகள் அமைப்பின் தலைவராக சௌமியா மற்றும் செயலாளராக நித்யஸ்ரீ ஆகியோர்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முன்னாள் மாணவியர் அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட
பொறுப்பாளர்களை கல்லூரி நிர்வாகத்தினர் பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர்.

தலைப்புச்செய்திகள்