Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர்   ச.உமா பங்கேற்பு

அக்டோபர் 31, 2023 06:28

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா  தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. 

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 385 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமாவிடம் பொதுமக்கள் வழங்கினர். 

மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், தாட்கோ மூலம் 6 பயனாளிகளுக்கு தூய்மை பணிபுரிவோர் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் இலவச சலவை பெட்டி, கூட்டுறவுத்துறையின் சார்பில் மத்திய கால கடனுதவி மற்றும்  2 மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவி என மொத்தம் 11 பயனாளிகளுக்கு ரூ.2.20 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். 

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்