Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வங்கி கடனுதவி முகாம் ஆட்சியர் ஆய்வு 

அக்டோபர் 31, 2023 11:50

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பட்டேல் நகர் பயனாளிகளுக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் நடைபெற்ற வங்கி கடனுதவி முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா  பார்வையிட்டு, ஆய்வு மேற்கொணடார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா  
செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, திருச்செங்கோடு வட்டம், பட்டேல் நகர் பகுதி  1 மற்றும் 2  திட்டப் பகுதிகளில் முறையே 720 மற்றும் 128 என மொத்தம் 848 அடுக்குமாடி  குடியிருப்புகள் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது. 

திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர்  தனது தொகுதி நிதியினை தற்காலிக கழிவுநீர் தொட்டி, தெருவிளக்குகள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைப்பதற்கு வழங்கியுள்ளார். 366 குடியிருப்பு களுக்கு திட்ட மதிப்பீட்டின்படி ஒரு குடியிருப்பிற்கு 1,15,500/- வீதம் பயனாளி பங்களிப்பாக 2021 ஆம் ஆண்டு முதல் பெறப்பட்டுள்ளது.

தற்போது திட்ட மதிப்பீடு அதிகரித்துள்ளதால் கூடுதலாக வைப்புத் தொகை ரூ.33,600/- செலுத்த வேண்டியுள்ளதால், இத்தகவலை ரூ.1,15,500/- செலுத்தியிருந்த 366 பயனாளிகளுக்கும் தெரிவிக்கப் பட்டுள்ளது. குடியிருப்புகளுக்கான தண்ணீர் வசதிக்கு தேவையான 6 ஆழ்துளை குழாய் கிணறுகளுடன் கூடிய 3 தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள், மேல்மட்ட நீர்த்தேக்கத்தொட்டிகள்  அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் தனிப்பட்ட குடிநீர் வசதி பெற ரூ.1,06,00,000/- தொகை செலுத்தப்பட்டு அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.

கடனுதவி வழங்குவதற்காக 8 அரசு மற்றும் அரசு சார்ந்த வங்கிகள் மூலம் கடனுதவி முகாம் இன்று ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. 24 நபர்கள் குடியிருப்புகளில் வீடுகள் பெறுவதற்கு முழுத் தொகையினை வழங்கியுள்ளனர். விரைவில் அந்த 24 நபர்களுக்கு வீடுகள் ஒப்படைக்கப்படவுள்ளது. பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு மேற்கொண்டு, அரசு விதிமுறைகளுக்குட்பட்டு விரைவில் கடனுதவிக்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அனைவரும் தங்களது சொந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த வங்கி கடனுதவி முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா  தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்