Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சேந்தமங்கலத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்

அக்டோபர் 27, 2023 12:08

சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறையின், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் சார்பில் மருத்துவ முகாம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

முகாமிற்கு முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வைத்தார். முகாமில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு காது, மூக்கு, தொண்டை, எலும்பு, கண், அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் நடந்தது.

முகாமில் டாக்டர்கள் விஜயபிரகாஷ், மணிகண்டன், ஹேமலதா, சங்கீதா, உட்பட பலர் பங்கேற்றனர். 

முகாமில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளை பரிசோதனை செய்து, தேசிய அடையாள அட்டை, உபகரணங்கள் வழங்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர். 80க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் பங்கேற்றனர்.

தேசிய அடையாள அட்டை 13 நபர்களுக்கும், தேசிய அடையாள அட்டை 4 நபர்களுக்கு புதுப்பிக்கப்பட்டது. 6 நபர்கள் உபகரணத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். ஒருவர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டார்.

முகாமில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சரஸ்வதி, வட்டார மருத்துவ அலுவலர் வடிவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், வட்டார வளமைய பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர் உட்பட பலர் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்