Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழா

அக்டோபர் 27, 2023 11:57

நாமக்கல்: உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாக சாலை அமைக்கும் பனி நிறைவு பெற்றது. வரும் நவ.1 ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள, கோட்டை பகுதியில், ஸ்ரீ நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித் தாயார் கோயில் எதிரில் ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு இரவு பகல் 24 மணி நேரமும் அருள் பாலித்து வருகிறார். 

தினசரி தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 1996 ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடைசியாக கடந்த 2009 ஆம்  ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தற்போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுமதியின்  பேரில் இந்த இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் ரூ. 64.60 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று, வர்ணம் பூசும் பணி நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி கோயில் கும்பாபிஷேக பணிகள் துவங்கியுள்ளது. 

பக்தர்களின் கோட்டை பகுதியில் கோவிலை சுற்றியுள்ள வீதிகளில், பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு மின் விளக்குகள் பொருத்தப் பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை அமைக்கும் பனி நிறைவு பெற்றுள்ளது.

மேலும் வருகிற 30 ஆம் தேதி மாலை 4 மணிக்கு முதல் கால யாக சாலை பூஜைகள் துவங்குகிறது. தொடர்ந்து பூசைகள் நடைபெற்று, வரும் நவ. 1ம் தேதி  புதன்கிழமை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெறும். 

தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படும். தமிழக அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி நகரம் முழுவதும் நவ. 1 ஆம் தேதியன்று போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும் என போலீசார் அறிவுத்துள்ளனர்.

கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை, திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி, அறங்காவலர்கள் சீனிவாசன், டாக்டர் மல்லிகை, செல்வா சீராளன், ரமேஷ் பாபு, அறநிலைய துறை உதவி கமிஷனர் இளையராஜா, கண்கணிப்பாளர் அம்சா மற்றும் குழுவினர் செய்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்