Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

களைகட்டியது அமீரக திரையரங்கம் கொண்டாட்டத்தில்  அமீரக விஜய் ரசிகர் மன்றம்

அக்டோபர் 25, 2023 11:17

துபாய்: அமீரக தளபதி விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பில் LEO FILM FANS CELEBRATION SHOW வை,  19-10-2023 தேதி  அன்று துபாய் ஸ்டார் சினிமாஸ் அல் குரைர் மாலில் ரகுவரன் மற்றும் சதீஷ் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்..

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரபல பின்னணி குரல் பயிற்சியாளர், பாடகி பல்லவி வினோத்குமார், அமீரக தொழில் முனைவோர் மற்றும் திறனாளர்கள் அமைப்பு  தலைவர் பால் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு தளபதி விஜய் ரசிகர் மன்ற சமூக பணிகள் தொடரவும், லியோ படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்தியும்  சிறப்புரையாற்றினர்.

மேலும் இந்நிகழ்வில் ஊடகவியலாளர் ஹிதாயத்துல்லா,  ரிதேஷ் மணி, குரு, முகம்மது கபீர், நரேன்லால், ஜாவித், விஷ்ணு மற்றும் அமீரக தளபதி விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியை துபாய் தர்பார் வலைத்தள குழுவினர் ஒருங்கிணைக்க, 89.4 தமிழ் FM RJ பிராவோ சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

தலைப்புச்செய்திகள்