Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சேலத்தில் விமான சேவை தொடக்கம்

அக்டோபர் 13, 2023 11:21

நாமக்கல்: சேலத்தில் இருந்து சென்னை பெங்களூரு மற்றும் ஹைதராபாத்திற்கு இண்டிகோ விமான சேவை வரும் அக்டோபர் 29 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. 

சேலத்திலிருந்து சென்னைக்கு தினசரி பிற்பகல் 12 50 மணிக்கும், சென்னையிலிருந்து சேலத்திற்கு தினசரி காலை 11 20 மணிக்கும் விமானங்கள் இயக்கப்பட உள்ளன. 

இதே போல் சேலத்தில் இருந்து ஹைதராபாத்திற்கு திங்கள் செவ்வாய்,  சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10:40 மணிக்கும், ஹைதராபாத்தில் இருந்து சேலத்திற்கு மேற்கண்ட நான்கு நாட்களில் பிற்பகல் 1.25 மணிக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. 
 
 தொழில் நகரமான பெங்களூருவிற்கு சனி, ஞாயிறு திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சேலத்திலிருந்து பிற்பகல் 3. 45 மணிக்கும் , பெங்களூருவிலிருந்து சேலத்திற்கு காலை 9 20 மணிக்கும் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

முக்கிய இணைப்பு நகரமான சேலத்தில் இருந்து, பொருளாதாரம் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நகரங்களை குறைந்த நேரத்தில்  இணைத்திடும் வகையில்  தொடங்கப்படவுள்ள இந்த விமான சேவையால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்