Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அண்ணா மிதிவண்டி போட்டிகள்

அக்டோபர் 12, 2023 06:09

நாமக்கல்: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் 14.10.2023 அன்று காலை 06.00 மணிக்கு அண்ணா மிதிவண்டி போட்டிகள் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக நுழைவுவாயில் முன் துவங்கி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கீழ்க்கண்டவாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாமக்கல்  மாவட்டப்  பிரிவு மூலமாக மிதிவண்டி போட்டிகள் நடத்தப்படவுள்ளது.  

 மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகள் கீழ்க்கண்ட பிரிவுகளில் மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு தனித்தனியாக நடத்தப்படவுள்ளது.
போட்டி விபரங்கள் 13 வயதிற்குட்பட்டவர்கள் (மாணவர்கள்) - 15 கி.மீ - (01.01.2011 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும்.13 வயதிற்குட்பட்டவர்கள் (மாணவிகள்) - 10 கி.மீ - (01.01.2011 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும்.

இதில் 15 வயதிற்குட்பட்டவர்கள் (மாணவர்கள்) -20 கி.மீ - (01.01.2009 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும். 15 வயதிற்குட்பட்டவர்கள் (மாணவிகள்) -  15 கி.மீ - (01.01.2009 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும்.


மேலும் 17 வயதிற்குட்பட்டவர்கள்  (மாணவர்கள்) -20 கி.மீ - (01.01.2007 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும். 17 வயதிற்குட்பட்டவர்கள் (மாணவிகள்) - 15 கி.மீ - (01.01.2007 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருத்தல் வேண்டும். 

மேலும் போட்டியில் பங்கேற்பவர்கள் தலைமை ஆசிரியர் கையொப்பமிட்ட வயது சான்றிதழ், ஆதார் மற்றும் வங்கிக்கணக்கு புத்தக நகல்களை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.

ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் மாணவ-மாணவியர்களுக்கு கீழ்க்கண்டவாறு பரிசுகளும் தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்படும். முதல் பரிசு - ரூ.5,000/-, இரண்டாம் பரிசு - ரூ.3,000/-, மூன்றாம் பரிசு - ரூ.2,000/-, 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு - ரூ. 250/- இப்போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் தயாரான சாதாரன மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

போட்டியில் எதிர்பாராமல் நேரும் விபத்துகளுக்கும், தனிப்பட்ட இழப்புகளுக்கும் பங்கு பெறும் மாணவ, மாணவிகளே பொறுப்பு ஏற்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா  தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்