Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அண்ணாநகரில் டெங்கு பீதியில் மக்கள் வடிகால் வசதிஇல்லாததால் கடும் அவதி

அக்டோபர் 12, 2023 02:49

மல்லசமுத்திரம்: கருங்கல்பட்டி அண்ணாநகரில், போதிய வடிகால் வசதிஇல்லாததால், பலநாட்களாக தேங்கிநிற்கும் மழைநீரால், டெங்கு பீதியில் மக்கள் உள்ளனர்.

மல்லசமுத்திரம் ஒன்றியம், கருங்கல்பட்டி அக்ரஹாரம் கிராமம், அண்ணாநகரில் 35குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர், சிமெண்ட் சாலையுடன் கூடிய வடிகால் வசதி அமைக்கப்பட்டது.

இச்சாலை நாளுக்குநாள் ஏற்பட்ட வெயில் மற்றும் மழை போன்ற இயற்கை சீற்றங்களால் தற்சமயம் சிணெ்ட்சாலை மற்றும் வடிகால் முற்றிலுமாக சிதிலமடைந்துவிட்டது.

இதனால், மழைக்காலங்களில் சாலையில் மழைநீர்தேங்கி அருகிலுள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடுகின்றது. அதுமட்டுமல்லாது, பலநாட்களாக மழைநீர் தேங்கிநிற்பதால், கொசுக்கள் உற்பத்தியாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் துன்புறுத்தி வருகின்றது.

தற்சமயம், கொடியவகை நோயான டெங்கு பரவலாக பரவிவருவதால், மக்கள் டெங்கு பீதியில் உள்ளனர். வயதானவர்கள் நடக்கமுடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுசம்மந்தமாக, மக்கள் பலமுறை பஞ்சாயத்து நிர்வாகத்திலும், அதிகாரிகளிடத்திலும் முறையிட்டும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

எனவே, அதிகாரிகள் முறையான ஆய்வுமேற்கொண்டு, சிதிலமடைந்து காணப்படும் சாலையை முற்றிலுமாக நீக்கிவிட்டு வடிகால் வசதியுடன்கூடிய புதிய சிமெண்ட் சாலையை அமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், பல்வேறு போராட்டங்கள் நடத்த போவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்