Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்செங்கோட்டில் 4  இடங்களில் லியோ ட்ரெய்லர் வெளியீடு 

அக்டோபர் 07, 2023 07:00

திருச்செங்கோடு: திறந்த வெளியில் LED ஸ்கிரீன் மூலமும் டிரையிலர் ஒளிபரப்பப்பட்டது. 

திரைப்பட நடிகர் விஜய் அவர்களின் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி உலகம் எங்கும் வெளியிடப்பட உள்ளது. அதனை ஒட்டி  படத்தின் டிரைலர் அனைத்துப் பகுதிகளிலும் வெளியிடப்பட்டது.  

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நான்கு இடங்களில் லியோ பட டிரைலர் வெளியிடப்பட்டது சேலம் ரோடு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் எல்.இ.டி ப்ரொஜெக்டர் மூலம் லியோ பட ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

மேலும் ட்ரெய்லர் வெளியிடப்படுவதற்கு முன்பு லியோ பட பாடல்களை ஓட விட்டு ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

அதேபோல் வெற்றி மலரசன் திரையரங்கில் விஜய் மக்கள் இயக்கம்  மாவட்ட வர்த்தக ராணி சார்பில் மேளதாளங்கள் முழங்க ரசிகர்கள் ஆரவாரத்துடன் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் திரையரங்கனுள் லியோ பட ட்ரெய்லர் வெளியிடப்பட்டதும் ரசிகர்கள்  நடனமாடினர்.

தலைப்புச்செய்திகள்