Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராசிபுரத்தில் பல் சிகிச்சை முகாம்

அக்டோபர் 07, 2023 06:21

ராசிபுரம்: ரோட்டரி கிளப் ராசிபுரம் ராயல் சார்பாக பட்டணம் ரோடு எஸ்.ஆர்.வி.இன்டர்நேஷனல் ஸ்கூலில் விவேகானந்தா பல் மருத்துவமனை இணைந்து நடத்திய பல் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமில் ராயல் கிளப் தலைவர் விஜய் தலைமை தாங்கினார்.  உதவி ஆளுநர் ராஜு, செயலாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். "விவேகானந்தா கல்லூரி மருத்துவர் வெண்ணிலா தலைமையில் "பல் சிகிச்சை முகாம்" நடைபெற்றது. 
இதில் ஆசிரியர், மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதில் ரோட்டரி கிளப் ராயல் சார்பில் வக்கீல் அன்பழகன் தலைவர் (தேர்வு) எம்.பூபாலன், ராஜேஷ், இன்ஜினியர் சிவா, சோமக்கண்ணன், ரமேஷ், முன்னாள் தலைவர் கார்த்தி, ராமலிங்கம் கார்த்திகேயன். தாமோதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக பொருளாளர் ஜெகதீஸ்வரன் நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்