Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வரும் 7 ஆம் தேதி அறிஞர் அண்ணா மாராத்தன் போட்டி

அக்டோபர் 06, 2023 08:55

நாமக்கல்: அறிஞர் அண்ணா நெடுந்துர ஓட்டப் போட்டி - 2023, கீழ்காணும் 2 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் வருகின்ற 07.10.2023 (சனிக்கிழமை) அன்று காலை 6 மணியளவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்பு நடைபெற உள்ளது.

இதில் 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் ஆண்கள் – 8 கி.மீ, பெண்கள் – 5 கி.மீ
2. 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் - ஆண்கள் – 10 கி.மீ, பெண்கள் – 5 கி.மீ மாராத்தன் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகையாக முதல் பரிசு ரூ.5,000/-, இரண்டாம் பரிசு தொகை ரூ.3000/-, மூன்றாம் பரிசு தொகை ரூ.2000/-, மேலும், 4  முதல்  10  இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.1000/- வீதம், தகுதிச்சான்றும் வழங்கப்பட உள்ளது.  

போட்டிக்கான விதிமுறைகளாக ஆதார் அட்டை, மருத்துவ தகுதி சான்றிதழ் மற்றும் வயது சான்றிதழை 06.10.2023 அன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்ட அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.

மேலும், 07.10.2023 காலை 6.30 மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போட்டி தொடங்குவதற்கு முன்பும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ளலாம், ஓடுவதற்கு ஏதுவான காலணி அணிந்திருக்க வேண்டும்.

போட்டி துவங்கும் முன் தங்களுடைய பதிவு எண்ணை (Chest Number) போட்டி நடக்கும் இடத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையினை (School, College ID Card & Bonafide)  காண்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

போட்டியின் முடிவு நடுவர் தீர்ப்பிற்குட்பட்டது, போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்கள் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தினை தெளிவாக கணக்கு எண் தெரியும்படி கொண்டு வருதல் வேண்டும், 

இப்போட்டி  மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக  நுழைவுவாயில் முன்  துவங்கி  சிஎம்சி கல்லூரி வரை 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ துரமும், பெண்களுக்கு எர்ணாபுரம் வரை 5 கி.மீட்டர் தூரமும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு சி.எம்.சி கல்லூரி வரை சென்று நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி வழியாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் வரை 10 கி.மீ. தூரமும், பெண்களுக்கு எர்ணாபுரம் வரை 5 கி.மீட்டர் தூரமும் நடைபெற உள்ளது. 
           
எனவே இந்த மாராத்தான் போட்டியில் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா  கேட்டுக் கொண்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்