Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பூர் குமரன், சுப்ரமணிய சிவா பிறந்த நாள் விழா

அக்டோபர் 06, 2023 08:23

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் திருப்பூர் குமரன்,சுப்ரமணிய சிவா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் அருகே வேமன் காட்டு வலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் விடுதலைப் போராட்ட தியாகிகள் திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவா பிறந்த நாள் விழா அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் நடந்தது.

இருவரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடிவினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக புத்தகங்களை தலைமை ஆசிரியை செல்வி வழங்கினார்.  

ஆசிரியர்கள் குமார், அருள், முத்து,பார்வதி,அம்சா, சந்தான லட்சுமி,கீதாமாதேஸ்வரி, முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

மாணவ மாணவிகள் தாய், தந்தை, ஆசிரியர்கள் சொல்படி நடப்பேன் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

தலைப்புச்செய்திகள்