Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் தாவரவியல் மன்ற தொடக்க விழா

அக்டோபர் 06, 2023 11:01

நாமக்கல்: நாமக்கல் திருச்சி சாலையில் செயல்படும் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தாவரவியல் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. 
கல்லூரி முதல்வர் கோவிந்தராஜீ தலைமை வகித்தார்.

தாவரவியல் துறைத் தலைவர் முத்துமணி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சமூக விதைவங்கி நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் உழவர் ஆனந்த் பங்கேற்று 'இயற்கை விவசாயம் மற்றும் நாட்டு விதைகள்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

அதில் விதைகளின் வகைகள், விதைகளின் முக்கியத்துவம், இயற்கை  வேளாண்மையின் நன்மைகள், புதிய வகை மாம்பழ கண்டுபிடிப்புகள், இந்த மண்ணை எவ்வாறு வளப்படுத்த வேண்டும். விதைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று விரிவாக எடுத்துரைத்தார்.

தாவரவியல் துறை இளநிலை 3-ம் ஆண்டு நித்யா நன்றி கூறினார். இதில் தாவரவியல் துறை இளநிலை மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட 350-க்கும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தலைப்புச்செய்திகள்