Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வீ.ஜி.விகாஸ் பப்ளிக் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களுக்கு விருதுகள்

அக்டோபர் 03, 2023 08:04

நாமக்கல்: சேலம், திருமணி முத்தாறு காக்க மக்கள் இயக்கம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு பலதரப்பட்ட போட்டிகள் நடைபெற்றன.

அதில் பங்கு கொண்டு வீ.ஜி.விகாஸ் பப்ளிக் பள்ளி மாணவர்கள் பல பரிசுகளைப் பெற்றனர்.

போட்டிகளில் கலந்து கொள்ள மாணவர்களை ஊக்குவித்த பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களுக்கு சேலம் சண்முகா மருத்துவமனை வளாக கலையரங்கில் விருதுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டன.

பள்ளி முதல்வர் கணேஷ் மற்றும் தமிழாசிரியர்கள் சார்பாக செ.கண்மணி, ஒருங்கிணைப்பாளர் ஏஞ்சலின் சில்வியா ஆகியோர் விருதினை பெற்றுக் கொண்டனர். பள்ளி முதன்மைச் செயல் அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் நிர்வாக அலுவலர் வினோத்குமார் ஆகியோர் பள்ளி முதல்வருக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்