Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சங்க இலக்கியங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம்: எழுத்தாளர் பெருமாள் முருகன் பேச்சு

அக்டோபர் 03, 2023 05:34

நாமக்கல்: நாமக்கல்லில் கூடு ஆய்வுச் சந்திப்பு மற்றும் நாமக்கல் தமிழ்ச்சங்கம் சார்பில் சங்க இலக்கிய தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் தமிழ் சங்க தலைவர் டாக்டர் குழந்தைவேல் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

எழுத்தாளர் பெருமாள் முருகன் வரவேற்றுப் பேசியதாவது, சங்க இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகம். அவ்வையார் என்றால் உடன் நினைவுக்கு வருவது அதியமான். அவரைப்பற்றி அவ்வையார் பாடல்கள் இயற்றியுள்ளார்.

மேலும் கடந்த 19ம் நூற்றாண்டில் பெண்கள் கல்வி கற்கக் கூடாது என கட்டுப்பாடு இருந்தது. அதுவும் தற்போது தகர்க்கப்பட்டு பெண்கள் கல்வியில் பெரிதும் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். சங்கத் தமிழ் இலக்கிய கீர்த்தனைகளை இயற்ற ஓராண்டு காலம் ஆனது என்றார்.

தொடர்ந்து சங்க இலக்கிய கீர்த்தனைகள் இயற்றிய விதம் குறித்து பெருமாள் முருகன் விளக்கிப் பேசினார். மேலும், சங்க இலக்கிய கீர்த்தனைகளை கர்நாடக இசைக் கலைஞரும் பாடகருமான டி.எம்.கிருஷ்ணாவின் இசைக்குழுவினர் பாடினர்.

நாமக்கல் தமிழ்சங்க நிர்வாகிகள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்