Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா

அக்டோபர் 03, 2023 05:29

ராசிபுரம்: ராசிபுரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்  96 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடினர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்   96 வது பிறந்த நாளை முன்னிட்டு  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், மற்றும் விஜயலட்சுமி திரை அரங்கம் ஆகிய பகுதிகளில்  சிவாஜி கணேசன்  திருவுருவப்படத்திற்கு சிறப்பாக அலங்கரித்து அவரின் 96 வது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் அவரது  ரசிகர்கள் பிறந்த நாளை கொண்டாடினர்.

இந்த நிகழ்விற்கு வழக்கறிஞர் ஆர்.டி. இளங்கோ தலைமை வகித்தார்.காமராஜ் ஹோட்டல்  முன்னிலை வகித்தார். மற்றும் மாதவன், ரவிச்சந்திரன், தங்கராஜ் டைலர், விறகு மணி, நடராஜ், ஆல்பர்ட் ,மனோகர், தனக்கொடி, மற்றும் மக்கள் நீதி மையம் நகர செயலாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

மேலும் பொதுமக்கள்,  பஸ் பயணிகள்,  தொழிலாளர்களுக்கு என அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.

தலைப்புச்செய்திகள்