Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

செப்டம்பர் 28, 2023 11:38

நாமக்கல்: நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறையின் சார்பில் “உலக வணிகம், பொருளாதாரம், நிதி மற்றும் சமூக அறிவியல்” என்ற தலைப்பிலான ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் கல்லூரி டிரினிடி கலையரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் எத்தியோப்பியா நாட்டின் சமாரா பல்கலைக்கழகத்தின்
கணக்குப் பதிவியியல் மற்றும் நிதியியல் துறை பேராசிரியர் சின்னையா அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

தனிநபர் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சியாகும், சர்வதேச அளவில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அனைத்து உலக நாடுகளின் பார்வையும் இந்தியாவின் செயல்பாடுகளை நோக்கியே அமைந்துள்ளது.

இந்தியாவின் குடியரசு தலைவராக பெண்மணியான திரௌபதி முர்மு உள்ளது போல எத்தியோப்பியாவிலும் சாலே வொர்க் செடே என்ற பெண்மணி தான் குடியரசு தலைவராக பதவி வகிக்கிறார்.

தற்போது மகளிர் பலர் தலைமைப் பதவிக்கு வந்துள்ளதால் நாட்டின் வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருகிறது.

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் காரணமாக சர்வதேச அளவில் தற்போது வணிகம், கல்வி, கலாச்சாரம் ஆகியவை வளர்ச்சி பெற்றுள்ளது.

திறன் மேம்பாட்டை நாம் சிறப்பாக பயன்படுத்தினால் நாம் மேன்மேலும் சாதிக்கலாம் என்றார். மற்றொரு சிறப்பு அழைப்பாளரான திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இணைப்பேராசிரியர் சி. பரமசிவன் தன் உரையில் குறிப்பிடும்போது, சமுதாய வளரச்சி, பொருளாதார வளர்ச்சி, சுற்றுப்புறச் சூழல் வளர்ச்சி என்பதே இ;ந்த நாட்டின் முழுமையான முன்னேற்றமாகும்.

மகளிர் பலர் தங்கள் ஆளுமையினை பல்வேறு துறைகளில் திறம்பட பயன்படுத்தி வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கின்றனர் என்றார்.

இந்நிகழ்வில் பேராசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகள்
அடங்கிய புத்தகத்தை சிறப்பு அழைப்பாளர்கள் வெளியிட்டனர்.

முன்னதாக முதல்வர் எம். ஆர்.லட்சுமிநாராயணன் வரவேற்புரை வழங்கினார். செயல்
இயக்குநர் அருணா செல்வராஜ் தன் உரையில் குறிப்பிடுகையில் பொருளாதாரம், வணிகவியல் மற்றும் நிர்வாகவியல் படித்தவர்கள் அதிகம் பேர் உலகமெங்கும் சாதித்து வருகின்றனர் என்றார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு – அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் வணிகவியல் துறைப் பேராசிரியர் டி.சந்திரசேகரன் குறிப்பிடுகையில், வணிகம் சம்பந்தப்பட்ட படிப்புகளை படிக்கும் பல பேர் தொழில்முனைவோர்களாக உருவாகியுள்ளனர் என்றார்.

கல்லூரியின் வணிகவியல் துறைத்தலைவர் எம்.சசிகலா சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார்.

மேலும் இந்நிகழ்வில் இராசிபுரம் திருவள்ளுவர் அரசுக் கல்லூரியின் வணிகவியல் துறை இணைப்பேராசிரியர் எஸ். சுபத்ரா, கல்லூரியின் இத்துறைப் பேராசிரியப் பெருமக்கள் எம்.சசிகலா,  ஜி.நித்யா,  எஸ்.தேவி, எம்.ராஜபத்மாவதி,  ஜி.கோகிலா, ஏ.ராஜேஸ்வரி, எல்.கீர்த்தி, நிர்வாக அலுவலர் என்.எஸ்.செந்தில்குமார் ஆகியோர் இந்நிகழ்வில் பேசினர்.

டிஜிட்டல் இந்தியா, மின்னணு வர்த்தகம் உலக வெப்பமயமாதல், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல், உலகமயமாதல், வேளாண்மை, மனிதவள மேம்பாடு, சந்தையியல், சரக்கு மற்றும் சேவை வரி,  மகளிர் முன்னேற்றம், இயற்கை உணவு,  உடல்நலம், தகவல் தொழில்நுட்பம் , தொழில்முனைவோர் வளர்ச்சி, போக்குவரத்து, பரஸ்பர நிதி, நிலம் மற்றும் ஆபரண முதலீடு ஆகிய தலைப்புகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவியர் தங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். 

இந்நிகழ்வில் கல்லூரித் தலைவர் கே.நல்லுசாமி இந்நிகழ்வினை பற்றி குறிப்பிடும்போது ஜிஎஸ்டி வரிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு வணிகவியல் துறை சார்ந்த மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன என்றார். பல்வேறு கல்லூரிகளில் இருந்து 1200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 

வணிகவியல் துறை மாணவியரின் வணிக வளர்ச்சி குறித்த கண்காட்சி காண்போரை வெகுவாகக் கவர்ந்தது.

தலைப்புச்செய்திகள்