Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆசிய விளையாட்டு போட்டி - துடுப்பு படகு போட்டியில் 3 பதக்கம் வென்றது இந்திய அணி

செப்டம்பர் 24, 2023 02:02

பீஜிங்: ஆசிய விளையாட்டு போட்டியில் துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளது. 8 வீரர்களுக்கான துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெள்ளி வென்றுள்ளது.

மேலும் 5.43 நிமிடங்களில் இலக்கை கடந்து இந்தியா பதக்கம் வென்றுள்ளது. இதேபோல், துடுப்பு படகு போட்டியில் இந்திய அணிக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. ஆண்கள் இணை துடுப்பு படகு இறுதிப்போட்டியில் இந்தியாவின் பாபு பால் மற்றும் லெக் ராம் ஜோடி வெண்கல பதக்கம் வென்றது.

இதில் 6:50.41 நேரத்தில் இலக்கை கடந்து இந்திய அணி வெண்கலம் வென்றது. துடுப்பு படகு போட்டியின் லைட் வெயிட் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் லால் மற்றும் அரவிந்த் சிங்; வெள்ளி பதக்கம் வென்றது. இந்திய அணி இதுவரை மொத்தம் 3 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றுள்ளது.

 

தலைப்புச்செய்திகள்