Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023: இந்தியாவுக்கு 5-வது பதக்கம்

செப்டம்பர் 24, 2023 01:42

சீனா: ஆசிய விளையாட்டு போட்டிகள் 1951 முதல் நடைபெற்று வருகிறது.

இதனை ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு முதன்முதலாக உருவாக்கப்பட்ட பிறகு இந்த தொடர் நடைபெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த போட்டி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட இந்த விளையாட்டுகள் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய விளையாட்டு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

ஆசிய விளையாட்டில் இதுவரை இந்தியா 672 பதக்கங்களை வென்று மொத்த வெற்றியாளர்கள் லிஸ்டில் 5-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் கொரோனா காரணமாக ஒரு ஆண்டு தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி 19-வது ஆசிய விளையாட்டு சீனாவின் ஹாங்சோவ் நகரில் நேற்று (சனிக்கிழமை) தொடங்கி அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது.

ஆனால் கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்