Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

 மஹேந்ரா பொறியியற் கல்லூரி முதலாமாண்டு துவக்க விழா

செப்டம்பர் 24, 2023 12:51

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியற் கல்லூரியின் 2023-24-ம் ஆண்டிற்கான முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் கல்லூரி தலைவர் எம்.ஜி.பாரத்குமார் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தார். 

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா, ஈரோடு மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களிடையே பேசினர்.

ஈரோடு மகேஷ் பேசுகையில், மாணவர்கள் உயர் கல்வி பயிலும்போது  எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முழு ஈடுபாட்டுடன் பயின்று, சமூகத்திற்கு நவீனத்துவத்தை உருவாக்கி தர முன் வரவேண்டும்.

திருக்குறளில் கூறியதுபோன்று தாய், தந்தையரை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்றும், கல்வியுடன் தொழிற் சார்நிறுவனங்கள் எதிர்நோக்கும் திறன்களை வளர்த்துக் கொண்டு முன்னேற வேண்டும் என பேசினார்.
 

விழாவில் பேசிய பட்டிமன்றப் பேச்சாளற் ராஜா பேசுகையில், சிறந்த பொறியாளராக உருவாக மாணவர்கள் கல்வியுடன் ஓழுக்கம், தன்னம்பிக்கை, வாழ்வில் எதார்த்தமாக இருத்தல், ஆசிரியர்களுக்கு கீழ்படிதல், முன்னோர்கள் வழி வாழ்வியலின் நெறிகளை பின்பற்றி முன்னேறவேண்டும் எனவும், சமூக அக்கறை இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு அவசியம் என்பதால் அதற்கேற்றவாறு தங்களை ஆற்றல் மிக்கவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார். 

விழாவில் கல்லூரி நிர்வாக இயக்குனர் பா.மஹா அஜய் பிரசாத், செயல் இயக்குனர் இரா. சாம்சன் ரவீந்திரன், கல்லூரி முதல்வர் மஹேந்ர கவுடா, புலமுதல்வர் சண்முகம், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் என்.விஸ்வநாதன், வேலைவாய்ப்பு இயக்குனர் சரவணராஜ், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்