Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மார்க் ஆண்டனி வெற்றியை நடிகர் அஜித் குமாருக்கு சமர்ப்பிக்கிறேன் ஆதிக் ரவிச்சந்திரன்

செப்டம்பர் 22, 2023 04:16

சென்னை: இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றிவிழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசியதாவது, "மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை அஜித் சாருக்கு சமர்ப்பிக்கிறேன்.

'நேர்கொண்ட பார்வை' படப்பிடிப்பில் அவரை சந்தித்ததற்கு பின் எனது மனநிலை மாறிவிட்டது. உன்னால முடியும் நீ போய் பெரிய படம் பண்ணு என்ற நம்பிக்கை அளித்தது அவர்தான்" என்று பேசினார். 
 

தலைப்புச்செய்திகள்