Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுகாதார, உணவு பாதுகாப்பு அலுவலர் ஓட்டல் கடைகளில் ஆய்வு

செப்டம்பர் 21, 2023 06:26

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் சுகாதார மற்றும்  உணவு பாதுகாப்பு அலுவலர் ஓட்டல் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

நாமக்கல்லில் உள்ள தனியார் ஓட்டலில் சவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்தார். இது தவிர மேலும் 43 பேர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்ட கலெக்டர் நேரில் சென்று அனைவருக்கும் ஆறுதல் கூறி வருவதுடன், மாவட்டம் முழுதும் உள்ள ஓட்டல்களில் ஆய்வு செய்ய உத்திரவிட்டுள்ளார்.

இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் ஓட்டல்களில் நகராட்சி ஆணையர் சரவணன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் (பொ) சதீஷ், சுகாதார ஆய்வாளர்கள் சந்தானகிருஷ்ணன் உள்பட பலர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் க்ரில் சிக்கன் 9 கிலோ, குளிர் சாதன பெட்டியில் பாக்கெட் செய்து வைக்கப்பட்ட பிரியாணி 4 கிலோ, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் 25 கிலோ பறிமுதல் செய்து  அழிக்கப்பட்டது. அபராதமாக 7 ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வு தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்