Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தீபாவளிக்கு  கோ-ஆப்டெக்ஸ்ல் சிறப்பு தள்ளுபடி ஆட்சியர் ச.உமா விற்பனையை துவக்கி வைத்தார்

செப்டம்பர் 21, 2023 06:24

நாமக்கல்: நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி - 2023 பண்டிகையை முன்னிட்டு 30% சிறப்பு தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா  தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக விளங்கும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 1935 முதல் தொடங்கப்பட்டு 88 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு கைத்தறி நெசவாளர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையிலும் தொடர்ந்து வேலைவாய்ப்பினை வழங்குவதற்காக விழா காலங்களில் 30% வரை அரசு சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது.

இந்தாண்டு தீபாவளி 2023-ல் புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சிபுரம் பட்டுபுடவைகள், ஆரணிபட்டுப் புடவைகள், சேலம் பட்டுப் புடவைகள் மற்றும் புதிய வடிவமைப்புடன் கூடிய மென் பட்டுபுடவைகள் ஏராளமாக குவிந்துள்ளன.

மேலும் கோவை, மதுரை, திண்டுக்கல், பரமக்குடி, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்து ரக காட்டன் புடவைகள் புதிய வடிவமைப்பிலும் மற்றும் களம் காரிகாட்டன் புடவைகள் நேர்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
    

மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் ஏற்றுமதி ரகங்களான ஏப்ரான், குல்ட் மெத்தைகள், கையுறைகள், டேபுள்மேட், ஸ்கிரின் துணிகள், தலையணை உறையுடன் கூடிய படுக்கை விரிப்புகள், பிரிண்டட் படுக்கை விரிப்புகள் மற்றும் இலவம்பஞ்சு மெத்தைகள், தலையணைகள் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு கைத்தறி இரகங்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையம் செயல்படும். அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளர்களுக்கு உதவிட அன்புடன் கோ-ஆப்டெக்ஸ் கேட்டுக் கொள்கிறது.
    

தீபாவளி 2023 பண்டிகைக்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1 விற்பனை நிலையத்திற்கு ரூ.75.00 லட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்புத் திட்டம் ரூ.300/- முதல் ரூ.3,000/- வரை இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

மேலும், 11 மாத சந்தா தொகையை அங்கத்தினர் செலுத்தினால் 12 வது மாத சந்தா தொகையினை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி கூடுதல் பலன் தருவதால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இத்திட்டத்தில் உறுப்பினராக இருந்து வருகின்றனர்.

தீபாவளி 2023 சிறப்பு தள்ளுபடியாக அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடன் வசதியில் 30% வரையிலான சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது.
தற்போது நாமக்கல் கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் கதவு எண் 46-A, மாரியம்மன் கோவில் தெரு, நாமக்கல் – 637 001, தொலைபேசி எண். 04286-291846 இயங்கி கொண்டு இருக்கின்றது. கோ - ஆப்டெக்ஸ் நாமக்கல் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2023 சிறப்பு தள்ளுபடி விற்பனையை நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்து, எஸ்.செல்விக்கு வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் கோ - ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் சு.காங்கேயவேலு, நாமக்கல் விற்பனை நிலைய மேலாளர் பெ.செல்வாம்பாள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்