Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கே.எஸ்.ரங்கசாமி கல்லூரி ஜவுளி தொழில்நுட்பத் துறைக்கு இந்திய ஜவுளி அமைச்சகம் நிதியுதவி

செப்டம்பர் 21, 2023 05:40

திருச்செங்கோடு: திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியின் ஜவுளி தொழில்நுட்பத் துறைக்கு “2023 ஆம் ஆண்டு தொழில்நுட்ப ஜவுளி கல்வியில் கல்வி நிறுவனங்களை இயக்குதல்” திட்டத்தின் கீழ் புதிய சிறப்பு ஆய்வகத்தை (தொழில்நுட்ப ஜவுளி ஆய்வகம்) அமைக்க ரூ. 6.5 கோடி தேசிய தொழில்நுட்ப ஜவுளி பணி, இந்திய ஜவுளி அமைச்சகம் மூலம் நிதியுதவி வழக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி உதவி ஆய்வக உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ. 6 கோடியும், தொழில்நுட்ப ஜவுளியின் பயன்பாடு பற்றி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிக்காக ரூ. 50 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மண்டலத்திலே தேசிய தொழில்நுட்ப ஜவுளி பணி, இந்திய அரசிடம் இருந்து அதிக நிதி உதவி பெற்றது இக்கல்லூரி மட்டுமேயாகும். இந்த நிதியுதவியின் மூலம் ஜவுளி தொழில்நுட்ப ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, சந்தை மேம்பாடு, கல்வி மற்றும் திறன் பயிற்சி மற்றும் தேசிய தொழில்நுட்ப ஜவுளி பணியின்படி ஏற்றுமதிகளை ஊக்கபடுத்துதல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதையே கல்லூரியின் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தொழில்நுட்ப ஜவுளி ஆய்வகம், தொழில் துறையை மேம்படுத்த தயாராக இருக்கும் மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் ஆக்கபூர்வமான திறன்களை ஊக்குவிக்கிறது. மேலும், இது ஸ்டார்ட் - அப் களைத் தொடங்குவதற்கும் மற்றும் தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதற்கும் அவர்களின் புதுமையான தொழில்நுட்ப யோசனைகளை ஜவுளி தயாரிப்புகளாக உருவாக்குவதற்கு ஊக்கமளிக்கிறது.

ஜவுளி தொழில் முனைவோர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் ஆர்வலர்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம், இதன் மூலம் அவர்கள் ஜவுளி சந்தைக்கு தேவையானவற்றை உற்பத்தி செய்ய முடியும்.

பல்வேறு தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளின் தேவையைப் பூர்த்தி செய்ய உயர்தர உபகரணங்கள், கருவிகள், இயந்திரங்களின் மாதிரிகளை தயாரித்து வழங்குவதற்கு இக்கல்லூரி திட்டமிட்டுள்ளது. இதன் முலம் ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் ஜவுளி தொழில்நுட்பத் துறையின் மையமாக செயல்படும்.

இந்த புதிய ஆய்வகம் நிறுவுவதன் மூலம் தொழில்நுட்ப ஜவுளி துறையில் தரமான கல்வியை பெற ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதற்கான முயற்சியை மேற்கொண்ட துணை முதல்வர் மற்றும் துறை தலைவர் கார்த்திகேயன், ஒருங்கிணைப்பாளர் சுகுமார் மற்றும் பேராசிரியர்களை கே.எஸ்.ஆர்.கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன், துணைத்தலைவர் சச்சின், முதல்வர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினர்.

தலைப்புச்செய்திகள்