Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

19ம் தேதி விநாயகர் ஊர்வலம் நடத்த அனுமதி மறுப்பு

செப்டம்பர் 13, 2023 09:15

அம்மாபேட்டை, செப்.13: தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சுமார் 13 விநாயகர் ஊர்வலங்கள் வழக்கமாக நடத்தப்படுவதுண்டு. ஆனால் இந்த ஆண்டு வழக்கமாக நடைபெறும் ஊர்வலத்திற்கு  குறித்த தேதியில் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  

இதுகுறித்து பா.ஜ.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் மற்றும் மத்திய அரசு வழக்கறிஞரான த.மகேந்திரன் கூறும்போது,  தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விஸ்வரூப விநாயகர் ஊர்வல கமிட்டியின் சார்பாக 13 இடங்களில் இருந்து விநாயகர் ஊர்வலங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டும் ஊர்வலம் நடத்த ஊர்வல பொறுப்பாளர்கள் 7.9.2023 அன்று நோட்டீசுடன், காவல்துறையில் தங்களது அனுமதி கடிதத்தை கொடுத்தனர். 

ஆனால் அதுகுறித்து காவல்துறையில் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. மேலும் இன்று (13.09.2023) அம்மாபேட்டை யூனியன் திருமண மண்டபத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பான ஊர் பொது அமைதிக்கூட்டம் அம்மாபேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கரிகாலன். தலைமையில் நடைபெற்றது. அதில் 20ம் தேதிதான் ஊர்வலத்தை நடத்த வேண்டும் என்று கூறிவிட்டார். 

அதற்கு பொறுப்பாளர்கள் மறுப்பு தெரிவித்ததற்கு, என்னால் இதுகுறித்து எதுவும் செய்ய முடியாது, மேலதிகாரிகள் கூறியதை நான் தெரிவித்து விட்டேன் என்று கூறிவிட்டார். அதையடுத்து விநாயகர் ஊர்வல பொறுப்பாளர்கள் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு வெளியில் வந்துவிட்டோம் என்று கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்