Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேட்டைய கவுண்டன் புதூர் ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா

செப்டம்பர் 13, 2023 05:22

நாமக்கல்: வேட்டைய கவுண்டன் புதூர் ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ளது வேட்டைய கவுண்டன் புதூர். இங்குள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் திருப்பணிகள் நடைபெற்றது. இதையொட்டி மகா கும்பாபிஷேக விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, மகா கணபதி ஹோமம், கிராம சாந்தி உள்ளிட்ட பூஜைகளுடன் துவங்கியது.

இதனையடுத்து விநாயகர் வழிபாடு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, திரளான பக்தர்கள் மோகனூர் காவிரி ஆற்றிற்கு சென்று புனித நீராடி, தீர்த்தக்குடங்களை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர். மாலை 6 மணிக்கு முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றது.

விநாயகர் வழிபாட்டுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. மஹா பூர்ணஹூதியுடன் யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று, அதிர்வேட்டுகள் முழங்க, தீர்த்தக் குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு, சுகவனம் சிவாச்சாரியார் தலைமையில், சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

தொடர்ந்து சுவாமி மூலவருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தச தரிசனம், மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள்  கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்