Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட விழிப்புணர்வு பிரச்சாரம்

ஆகஸ்டு 30, 2023 12:26

குமாரபாளையம்: பள்ளிபாளையத்தில் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட
விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.

பள்ளிபாளையம் வட்டார வேளாண்மை ,மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், உணவு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய பயிர்களின் சாகுபடி உற்பத்தியை அதிகரிக்கவும், ஊட்டமிகு சிறுதானியங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், பள்ளிபாளையம் வட்டாரத்தில் உள்ள 17 கிராமங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமணி தலைமை வகித்தார்.

இதில் வரகு, திணை, சாமை, குதிரைவாலி, கம்பு, சோளம், ராகி ஆகியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்ய வலியுறுத்தப்பட்டது. சிறுதானிய விதைகள், நுன்னூட்டங்கள்,  உயிர் உரங்கள், இயற்கை பயிர் பாதுகாப்பு மருந்துகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் தயார் நிலையில் இருப்பது குறித்து எடுத்து கூறப்பட்டது. வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்