Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி

ஆகஸ்டு 23, 2023 02:15

வெண்ணந்தூர்: வெண்ணந்தூர் வட்டார வள மையத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி நடந்தது. 

இப்பயிற்சியினை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நடராஜன் துவக்கி வைத்தார். பேரூராட்சி தலைவர்கள் திருமலை, சின்னுசாமி, மாதேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.

மேலும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுந்தர்ராஜன் பயிற்சியின் முக்கியத்துவம் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவின் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பொறுப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

இதில், குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ல் கூறியுள்ளபடி குழு அனைத்து பள்ளிகளிலும் கட்டமைக்கப் பட்டுள்ள பள்ளி மேலாண்மை குழு மற்றும் அதன் செயல்பாடுகளைப் பற்றியும், சட்டம் வலியுறுத்தும் குழந்தைகளின் உரிமைகள் பற்றியும், நகர்புற உள்ளாட்சித் துறை பிரதிநிதிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது. 

மேலும், பள்ளியின் வளர்ச்சி குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதில் நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்கு குறித்து புரிதல் ஏற்படுத்தப்பட்டது. பள்ளியின் கட்டமைக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மை குழுவில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் பொறுப்பும் கடமையும் உணர்ந்து செயல்பட கூறப்பட்டது.

அதனை தொடர்ந்து பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் அடிப்படையில், பள்ளி வளர்ச்சி முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் பங்கினை மேம்படுத்துதல் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

இப்பபயிற்சியின் கருத்தாரர்களாக சமுதாய அமைப்பாளர் தேவகி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் ஜெகதீஷ் ஆகியோர் செயல்பட்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர், சிற்றுண்டி மற்றும் மதியஉணவு வழங்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்