Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா

ஆகஸ்டு 21, 2023 12:32

நாமக்கல்: நாமக்கல் நகர காங்கிரஸ் சார்பில், மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

இதில் மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாள் விழா, நாமக்கல் நகர காங்கிரஸ் கமிட்டி ஆபீசில் நடைபெற்றது. நகர காங்கிரஸ் தலைவர் மோகன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். 

நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் வீரப்பன், செல்வராஜ், பொறியாளர் அணி பொன்முடி, முன்னாள் மாணவர் காங்கிரஸ் செயலாளர் டாக்டர் பாலாஜி, நகர காங்கிரஸ் நிர்வாகிகள் செல்வம், ஜபூருல்லா, தாஜ், லோகநாதன், ராஜேந்திரன், நடேசன், செல்வராஜ், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, ராஜீவ்காந்தியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தலைப்புச்செய்திகள்