Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எஸ்.வாழவந்தி மாரியம்மன், செல்லாண்டியம்மன் கோயிலில் பாலபிஷேக விழா

ஆகஸ்டு 14, 2023 10:52

நாமக்கல்: எஸ்.வாழவந்தி மாரியம்மன், செல்லாண்டியம்மனுக்கு, ஆடிக கடைசி வெள்ளியை முன்னிட்டு, 28 ஆம் ஆண்டு பால் அபிஷேகம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள எஸ். வாழவந்தியில், இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட, ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோயில் அமைந்துள்ளது

இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பால் குட அபிசேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு, ஆடி மாத கடைசி வெள்ளிகிழமையை முன்னிட்டு, கொமராபாளையம் அருகே, காவிரி ஆற்றில் இருந்து ஏராளமான ஆண்களும், பெண்களும் பால்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர்.

பின்னர், ஸ்ரீ மாரியம்மன், செல்லாண்டியம்மனுக்கு, 28 ம் ஆண்டு பால்குட அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாக்குழு சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்