Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரி மாணவியர் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

ஆகஸ்டு 12, 2023 01:50

நாமக்கல்: நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மையம், நாட்டுநலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் “போதை ஒழிப்பு உறுதிமொழி” நிகழ்வு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளை நான் அறிவேன் என்றும், போதைப் பழக்கத்திற்கு நான் எப்போதும் ஆளாக மாட்டேன் என்றும்ரூபவ் என் குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுப்பேன் என்றும், போதையில்லா மாநிலமாக தமிழ்நாடு உருவாக என்னால் ஆன அனைத்துப்
பணிகளையும் மேற்கொள்வேன் என இந்நிகழ்வில் மாணவியரும், பேராசிரியர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன், கல்லூரி
முன்னாள் மாணவியர் சங்கத் தலைவர் ஆர்.நவமணி, நாட்டுநலப்பணித்திட்ட
அலுவலர்கள் எம்.சசிகலா, எஸ்.ஜெயமதி, போதை ஒழிப்பு விழிப்புணர்வு மைய
ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜெயந்தி, செஞ்சுருள் சங்க அலுவலர் வீ.கோகிலா,
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை ஏ.லதா, வணிகவியல் துறை உதவிப் பேராசிரியை ஆர்.சுபா, உடற்கல்வி இயக்குநர் வீ.அர்ச்சனா உட்பட கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்