Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தளபதி லயன்ஸ் சங்கத்தார் இலவச கண்சிகிச்சை முகாம்

ஆகஸ்டு 07, 2023 10:37

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் தளபதி லயன்ஸ் சங்கத்தார் சார்பில்
இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது.

மேலும் குமாரபாளையம் அருகே கத்தேரி ஊராட்சியில்  தளபதி லயன்ஸ் சங்கத்தார் சார்பில் சங்க தலைவர் தனபால் தலைமையில்  இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது.

ஈரோடு அரசன் கண் மருத்துவமனை டாக்டர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு கண் சிகிச்சை குறித்த ஆலோசனைகள் வழங்கினர்.

இதில் பங்கேற்ற 120 பயனாளிகளில் 68 பேர்  ஐ.ஓ.எல். பொருத்தும் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

கத்தேரி ஊராட்சி தலைவி தமிழ்செல்வி, துணை தலைவி கவிதா, சங்க நிர்வாகிகள் பிரபு, விஸ்வநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்