Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களில் உலக பல் சுகாதார விழிப்புணர்வு தினவிழா

ஆகஸ்டு 03, 2023 11:28

நாமக்கல்: சேலம் சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களில் உலக பல் சுகாதார விழிப்புணர்வு விழா கொண்டாடப்பட்டது. விழிப்புணர்வு முகாமிற்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் தாளாளர் மற்றும் செயலாளர் டாக்டர் மு.கருணாநிதி தலைமை தாங்கினார்.

சங்ககிரி வளாக தலைமை செயல் அதிகாரி பேரா.வரதராஜு, கல்லூரி முதல்வர் டாக்டர் பாலசுப்ரமணியன் டெக்ஸ்டைல் ஃபேஷன் டிசைனிங் மற்றும் காஸ்ட்யூம் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே.இரவிசங்கர் ஐக்யூசி இயக்குநர் டாக்டர் சுரேஷ்குமார் அட்மிஷன் அதிகாரி பேராசிரியர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பல் மருத்துவ கல்லூரியின் இயக்குநர் மருத்துவர்கள் கோகுல்நாதன், செந்தில்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டனர். விழாவில் பல் சுகாதாரம் குறித்து டாக்டர் செந்தில்குமார் பேசுகையில் மனித உறுப்புகளில் பற்கள் மிகவும் இன்றியமையாதவை.பற்கள் பாதுகாக்கப்படவில்லை என்றால் உடலில் பல்வேறு வகையான நோய்கள் உண்டாகும்.

ஒவ்வொரு நாளும் காலை எழுந்தவுடன் பிரஸ் கொண்டு இரண்டு நிமிடங்கள் பல்லை சுத்தம் செய்ய வேண்டும். பற்பசையை மிகவும் குறைந்த அளவு பயன்படுத்த வேண்டும். காலை மற்றும் இரவு உணவுக்குப் பின் பற்களை பிரஸ் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். மூன்று மூன்று பற்களாக பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும். சொத்தைப் பல் உள்ளிட்ட கோளாறுகள் ஏற்பட்டால் உடனடியாக பல் மருத்துவர்களை அணுகி சிகிச்சைப் பெற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்த விழிப்புணர்வு முகாமில் 2000 மாணவிகள் பங்கேற்றனர். அனைத்து மாணவிகளுக்கு பல் சுகாதாரம் குறித்து கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்பட்டது. மாணவிகள் மிகவும் ஆர்வமுடன் வினாக்களுக்கு விடையளித்தனர். சிறப்பான முறையில்; விடையளித்த மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பாக பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

விழிப்புணர்வு முகாமிற்கான ஏற்பாடுகளை விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் டெக்ஸ்டைல் ஃபேஷன் டிசைனிங் மற்றும் காஸ்ட்யூம் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் மாணவிகள் சிறப்பாக செய்தனர்.

தலைப்புச்செய்திகள்