Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மண்டல அளவிலான மருத்துவப் போட்டியில் சங்ககிரி விவேகானந்தா நர்சிங் கல்லூரி மாணவிகள் சாதனை

ஜுலை 25, 2023 01:25

நாமக்கல்: சேலம் மாவட்டம் சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் ஒரு அங்கமான விவேகானந்தா மகளிர் நர்சிங் மகளிர் கல்லூரியில் மண்டல அளவிலான
மருத்துவத் துறைப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் மண்டல அளவில் 15 நர்சிங் கல்லூரிகளைச் சார்ந்த 500 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

இப்போட்டிகள் செவிலியர் மாணவ, மாணவிகளுக்கு உடல், மனம் மற்றும் சமூக
ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும், அவர்களின் திறமையை ஊக்குவிப்பதாகவும்
அமைந்தது.

சேலம் மண்டல அளவிலான பல்வேறு போட்டிகளின் துவக்க விழாவிற்கு விவேகானந்தா
கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் தாளாளர் மற்றும் செயலாளர் பேராசிரியர்டாக்டர் மு.கருணாநிதி தலைமை தாங்கினார். சங்ககிரி வளாக தலைமை செயல்அதிகாரி வரதராஜ், கல்லூரி முதல்வர் டாக்டர் கிருபா, துணை முதல்வர் மாலதி
ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு, மாவட்ட பயிற்சி பெற்ற செவிலியர் சங்கத்தின் இணை செயலாளர் மற்றும் சென்னை செவிலியர் மருத்துவ கல்லூரியின் முதல்வருமான டாக்டர் சங்கர் சண்முகம் கலந்து கொண்டார்.

பல்வேறு போட்டிகளுக்கு சேலம், திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்ட நர்சிங் கல்லூரிகளில் இருந்து 10 சிறப்பு நடுவர்கள் வருகை தந்து சிறப்பித்தனர். நான்கு விதமான மேடைநிகழ்வுகள் மற்றும் மேடைக்கு வெளியே நடைபெற்ற 12 விதமான போட்டிகளில் 500 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் பங்கேற்றனர். 

போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் கல்லூரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் தாளாளர் மற்றும் செயலாளர் பேராசிரியர் டாக்டர் மு.கருணாநிதி வழங்கினார்.

மருத்துவ துறை சம்மந்தப்பட்ட மண்டல அளவிலான போட்டிகள் சேலம் மண்டலத்தில் விவேகானந்தா மகளிர் நர்சிங் கல்லூரியால் முதல் முறையாக நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்