Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முத்தாயம்மாள் கலை  கல்லூரியில் மாணவர்கள் தொழில் முறை பயணம்

ஜுலை 22, 2023 12:50

ராசிபுரம்: வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் (தன்னாட்சி)யின், ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை சார்பில், மாணவர்களுக்கான தொழில் முறை பயணமானது சேலத்திலுள்ள பிரபல நட்சத்திர “ஹோட்டல் ரேடிசனுக்கு”பார்வையிடும் விதமாக ஏற்பாடு செய்யபட்டிருந்தது. ஹோட்டல் ரேடிசனின் மனிதவள திறன் மேம்பாட்டின் மேலாளர் ரா. பிரபு மாணவர்களிடையே கலந்துரையாடினார். 

அவருடைய உரையாடலானது மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும், தொழிலை மிகவும் எளிதாக பழகிக்கொள்ளவும், ஹோட்டல் துறையின் அனுபவங்கள் பற்றி அறிந்து கொள்ளவும் பயனுள்ளதாக இருந்தது. 

மேலும் ஹோட்டலில் உள்ள துறைகளான கிட்சன், ஃபுட் அன்டு பிவரேஜ் சர்வீஸ், பிரன்ட் ஆபிஸ், விடுதி பராமரிப்பு துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாணவர்கள் கண்டு பயன் பெற்றனர். இதன் மூலம் மாணவர்கள் ஹோட்டலில் உள்ள பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை செய்முறையாக கண்டு ஊக்கம் பெற்றனர்.

இந்த தொழில்முறை பயணத்தின் வாயிலாக பல்வேறு தொழில் நுணுக்கங்களையும், அனுபவங்களையும் பெற்ற மாணவர்கள், ஹோட்டல் நிர்வாகத்திற்கும், இதை ஏற்பாடு செய்து கொடுத்த கல்லூரி நிர்வாகத்திற்கும் துறைத் தவைர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்