Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புளியங்குடி மாரியம்மன் கோவிலில் பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா 

ஜுலை 17, 2023 06:42

வாசுதேவநல்லூர்: புளியங்குடி மாரியம்மன் கோவில் பெருந்தலைவர் காமராஜர் திடலில் பெருந்தலைவர் காமராஜர் 121வது பிறந்தநாள் விழா, கல்வி வளர்ச்சித் திருவிழா நடைபெற்றது.

இதில் ஏழை எளியோருக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு திமுக அயலக அணி இணைச்செயலாளரும், நாடார் மகாஜன சங்க அச்சக செயலருமான எஸ்.ஜே. மகா கிப்சன்   தலைமை தாங்கினார். 

புளியங்குடி நாடார் உறவினர் முறை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சி.என் பண்டாரக்குட்டி அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னதாக காமராஜரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இவ்விழாவில் புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமார், புளியங்குடி நகர மன்ற தலைவர் விஜயா, சௌந்தரபாண்டியன், நகர மன்ற துணைத்தலைவர் அந்தோணிச்சாமி ஆகியோர் சிறப்பு பரிசுகள் வழங்கினர். 

மேலும் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் மகாலிங்கம், எம்.எஸ். மதன் குரூப்ஸ் சுப்ரமணியன், என்.எம்.எஸ்.விவேகானந்தன் , திருப்பதி, சிட்பண்ட் கணேசன், குறிஞ்சி மகேஷ், டாக்டர் மதுசூதனன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் குருசாமி பாண்டியன், மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, மாலையில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. முப்பெரும் விழா நலத்திட்ட உதவிகளை கிங்மேக்கர் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் எஸ்.குருநாதன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். முடிவில் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜனார்த்தனன் நன்றி கூறினார்.

 

தலைப்புச்செய்திகள்