Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மல்லூர் வீ.ஜி.விகாஸ் பப்ளிக் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்

ஜுலை 15, 2023 11:58

நாமக்கல்: மல்லூர் வீ.ஜி.விகாஸ் பப்ளிக் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாளாக கருதப்படும் காமராசர் பிறந்தநாள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இதில் காமராசரின் உருவப்படம் வரைந்து மாணவர்களும், ஆசிரியர்களும் சிறப்பு செய்தனர்.

இப்பள்ளியின் முதன்மை செயல் அலுவலர் திருநாவுக்கரசு காமராசரின் தியாகங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். 

பள்ளி முதல்வர் கணேஷ் கல்வியின் தேவை குறித்து பேசினார். மாணவர்களும், "கல்வியால் உலகை ஆள்வோம்" என்ற காமராசரின் கனவை நிறைவேற்ற உறுதி எடுத்தனர்.

தலைப்புச்செய்திகள்