Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்ட  தூய்மை பணியாளர் பணி நீக்கத்தை கண்டித்து போதையில் ரகளை

ஜுலை 15, 2023 11:57

குமாரபாளையம்: குமாரபாளையம் நகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர் வாகன ஓட்டுனராக பணிபுரிந்தவர் மாதேஸ், இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு குடிபோதையில் பணிக்கு வந்ததால் நகர் மன்ற தலைவர் குடிபோதையில் பணிக்கு வரக்கூடாது என எச்சரிக்கை செய்ததுடன் பணிநீக்கம் செய்ததாக தெரிகிறது.

இதனால் மணமுடைந்த தூய்மை பணியாளர் வாகன ஓட்டுநர் மாதேஷ் கடந்த இரண்டு தினங்களாக குடிபோதையில் வாகனங்களை மரித்து தன்னை நகராட்சி பணியில் மீண்டும் அமர்த்த வேண்டும் என தகராறில் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் குமாரபாளையத்தில் இருந்து எடப்பாடி செல்லும் சாலையில் மதுபோதையில் பள்ளி வாகனம் முன்பு படுத்துக் கொண்டு நகராட்சி தற்காலிக பணிகளில் தன்னை மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என சத்தமிட்டபடி போக்குவதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் படுத்துக்கொண்டார். 

மேலிம் இதனால் போக்குவரத்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பள்ளி மாணவர்கள் ஏற்றி சென்ற வாகனங்கள் முன்பு குடி போதையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள்  அவரை குண்டு கட்டாக தூக்கி ஓரமாக அமர வைத்து காவல்துறையில் புகார் செய்தனர். 

இதில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரகளையில் ஈடுபட்ட டிரைவர் மாதேஸை அழைத்து சென்றனர். குடிபோதை ஆசாமியின் திடீர் மறியலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தலைப்புச்செய்திகள்