Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முஞ்சனூர் பகுதிக்கு பேருந்து சேவை கொடியசைத்து துவக்கி வைத்தார்: எம்.எல்.ஏ ஈஸ்வரன் 

ஜுலை 15, 2023 11:08

திருச்செங்கோடு: திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, மல்லசமுத்திரம் ஒன்றியம், முஞ்சனூர் ஊராட்சி பகுதி மக்கள் பேருந்து வசதி வேண்டி சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏவிடம் கோரிக்கை வைத்தனர். 

இதையடுத்து எம்.எல்.ஏ எடுத்த சீரிய முயற்சியால் முஞ்சனூர் பகுதியில் நாமக்கல்லில் இருந்து வையப்பமலை, நாகர்பாளையம் வழியாக முஞ்சனூர் பகுதிக்கான பேருந்து சேவையை கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ கொடியசைத்து துவக்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நதிராஜவேல், மாவட்டத் தலைவர் சேன்யோகுமார், மண்டல இளைஞர் அணி செயலாளர் ராயல் செந்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.கே.சி செந்தில், மல்லசமுத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஈ.கே ராஜா, பொருளாளர் பழனிவேல், ஊராட்சி செயலாளர்கள், கட்சி பொறுப்பாளர்கள், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்