Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பள்ளிபாளையம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: மாவட்ட ஆட்சியர் ச.உமா ஆய்வு

ஜுலை 14, 2023 01:18

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதில் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், கொக்கராயன்பேட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.50.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார அலகு மற்றும் ஆய்வகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்வின்போது ஆய்வகத்தின் செயல்பாடுகள், வருகை தரும் நோயாளிகள் எண்ணிக்கை, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருந்துகளின் இருப்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஓடப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சியில் ஒப்பளிக்கப்பட்ட நிதி வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.11.68 லட்சம் மதிப்பீட்டில் ஒ.பாப்பம்பாளையம் காமாராஜர் வீடு முதல் விநாயகர் கோவில் வரை வடிகால் அமைப்பு, ஓ.பாப்பம்பாளையம் முனியப்பன் கோயில் ஆற்றங்கரையில் மாவட்ட ஆட்சித் தலைவர் விருப்புரிமை நிதியின் கீழ் ரூ.20.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள படித்துறை, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் பெண்கள் உள்நோயாளிகள் பிரிவு, புற நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு நோயாளிகளிடம் அளிக்கப்படும் சிகிச்சைகள், மருத்துவ வசதிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். 

இதைப்போல் முன்னதாக நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் ஏ.இறையமங்கலம் ஊராட்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30.72 லட்சம் மதிப்பீட்டில் இறையமங்கலம் ஊராட்சி - வெள்ளியம்பாளையம் முஸ்லீம் தெருவில் சாக்கடை அமைக்கப்பட்டுள்ளதையும், பரமத்தி ஊராட்சி ஒன்றியம், பில்லூர் ஊராட்சியில் கனிமம் மற்றும் சிறு கனிமம் திட்டத்தின் கீழ் ரூ.10.00 லட்சம் மதிப்பீட்டில் அர்த்தனாரிபாளையம், மாணிக்கநத்தம் சாலை முதல் வடுவன்காடு வரையிலான சாலையை பலப்படுத்தும் பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு பணிகளை தரமாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒப்பந்த காலத்திற்குள் கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 

இந்த ஆய்வுகளின் போது, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டேவிட்சன், மாதவன், மருத்துவ அலுவலர் மரு.ரேவதி ஆகியோர் உட்பட பொறியாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்