Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பார்வை, செவித்திறன் குறைபாடுடையோர்  ஸ்மார்ட் போன் பெற அழைப்பு

ஜுலை 14, 2023 12:57

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பார்வை குறைபாடுடையோர் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட் செல்போன் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.உமா அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் கூறிப்பிட்டுள்ளதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பார்வை குறைபாடுடையோர், செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் விலையில்லா ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்தின்கீழ் கீழ்கண்ட தகுதிகள் உடைய மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

அவையாவன: மாற்றுதிறனாளிக்கான வயது என்பது 18 வயது முதல் 70 வயது வரை இருக்க வேண்டும். இதில் பார்வைத்திறன் குறைபாடுடையவர்கள் மற்றும் செவித்திறன் குறைபாடுடையவர்கள் மற்றும் (மாற்றுத்திறன் தன்மை 80% முதல் 100% வரை இருத்தல் வேண்டும்) என தெரிவித்துள்ளார்.

அதன் படி உயர்கல்வி பயில்பவர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் சுய தொழில் புரிபவர்கள் இதில் மேற்காணும் தகுதிகள் உடையவர்கள் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், கல்வி பயிலுவதற்கான சான்று, பணிச்சான்று, சுய தொழில் புரிவதற்கான சான்று கொண்டுவர வேண்டும்.

மேலும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், மற்றும் 1 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் அறை எண்.7 ல் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயனடையும் படி நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்