Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராசிபுரம் மருத்துவர் தங்கவேலுக்கு சிறந்த மருத்துவச் சேவைக்கான ஐ.எம்.ஏ விருது

ஜுலை 05, 2023 12:04

ராசிபுரம்: ராசிபுரம் குழந்தைகள் நல மருத்துவர் இ.தங்கவேலுவின் சிறந்த மருத்துவச் சேவையை பாராட்டி இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது. 

ராசிபுரம் நகரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவச் சேவையாற்றி வருபவர் டாக்டர் இ.தங்கவேல். இவரது மருத்துவச் சேவையை பாராட்டி இந்த ஆண்டிற்கான சிறந்த மருத்துவருக்கான விருது வழங்கப்பட்டது. 

பின்னர் இந்திய மருத்துவச் சங்கம் சார்பில், சங்கத்தின் மாநிலத் தலைவர் செந்தமிழ் பாரி தலைமையில் சென்னையில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கப்பட்டது.

இதே போல், தலைமை பண்பு, இந்திய மருத்துவச் சங்க உறுப்பினர் சேர்க்கை போன்றவற்றில் சிறப்பான பணிக்காக பாராட்டி ராசிபுரம் சுகம் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜி.சுகவனத்திற்கு விருது வழங்கப்பட்டது.

இவ்விழாவில் தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சிறந்த மருத்துவருக்கான கேடயம் மற்றும் சான்றிதழை வழங்கினார்.

மேலும் விழாவில் ஐ.எம்.ஏ., மாநிலச் செயலர் டாக்டர் தியாகராஜன், முன்னாள் தலைவர் டாக்டர் எஸ்.பிரகாசம், ராஜவேலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

தலைப்புச்செய்திகள்