Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஏரி சாலையை சரிசெய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ஜுலை 05, 2023 11:52

எலச்சிபாளையம்: எலச்சிபாளையத்தில், ஐந்து வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட ஏரிச்சாலையை சரி செய்ய வலியுறுத்தி கவுன்சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் ஏரி குளம் அமைந்துள்ளது. இவ்வழியாக, சூரப்புலி அம்மன் கோவில், ஏரிக்கரை பிள்ளையார் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்கள் அமைந்துள்ளது.

இங்கு செல்லும் பாதை கடந்த 60 வருடங்களாக மண் சாலையாக உள்ளது. கடந்த 2018-19 ஆம் ஆண்டில், இச்சாலையை சரி செய்ய எம்.ஜி.என்.ஆர்.ஜி.எஸ். திட்ட மூலம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.19 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுவரையில் பணிகள் தொடரவில்லை.

இச்சாலையின் இருபுறமும் சீமை கருவால மரங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. அதுமட்டுமல்லாது சாலை குண்டும், குழியுமாகவும் மழைக்காலங்களில் சேரும், சகதிகமாக இருப்பதால் கொத்தம்பாளையம் மற்றும் அகரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன்கடை மற்றும் பஸ் நிறுத்தத்திற்கு செல்ல மிகவும் அவதிப்பட்டு வந்தனர். 

இதுகுறித்து பலமுறை மக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், எலச்சிபாளையம் 5 வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் தலைமையில், ஏரிச்சாலையில் அமர்ந்து திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பி.டி.ஓ. அருளப்பன், வி.ஏ.ஓ.சத்யராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் இடம் பேசி, சாலை அமைத்துதர எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததின் பின்னர் ஆர்ப்பாட்டத்தை விடுத்து கலைந்து சென்றனர். 

இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சி.பி.எம்., ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரமேஷ், கிட்டுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்